யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது மோசமான தாக்குதல்!

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது மோசமான தாக்குதல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவரான ப.சுஜீவன் படுகாயமடைந்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் வருட மாணவர்கள் சிலரால் அவர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் என்று சக மாணவர்களால் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்குள்ளானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவன் சுஜீவனுக்கும் நான்காம் வருட மாணவர்கள் சிலருக்கும் இடையே முறுகல் நிலை நீடித்தது.

மாணவன் சுஜீவனை நேற்றுமுன்தினம் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளியில் வைத்து பின்தொடர்ந்த நான்காம் வருட மாணவர்கள் சிலர், அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டிருந்தனர்.

எனினும், வீதியில் பொதுமக்களின் போக்குவரத்து அதிகமாக இருந்த காரணத்தால் நான்காம் வருட மாணவர்கள் சிலரின் அந்த முயற்சி பயனளிவில்லை.

இந்தநிலையில். நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அந்த மாணவனைச் சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள் சிலர் அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர்.

சம்பவத்தில் மாணவன் சுஜீவன் தலைப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net