ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை!

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை!

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ அல்லது தனி நாடு அமையவேண்டும் என்றோ தான் எண்ணவில்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழருக்கான தீர்வைப் பெற்றுதருவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில், யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

“யுத்தத்திற்கு முன்னரான காலப் பகுதியில் வடக்கு , கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

கடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன. அதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள்.

அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டதோடு வன்முறைக் கலாசாரங்களும் ஊக்குவிக்கப்பட்டன.

இந்நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், போதைவஸ்து பாவனை மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

வன்முறை சம்பவங்களையும், போதை பொருள் பாவனையையும் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை.

விடுதலைப்புலிகள் இவ்வறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியிருந்தார்கள். அது பற்றியே அன்றைய தினம் எனது உரையில் குறிப்பிட்டேன். அந்த உரை தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது.

ஆனால் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ, தனி நாடு அமையவேண்டும் என்றோ அல்லது புலிகளை ஆதரித்துப் பேச வேண்டுமென்றோ நான் எண்ணவில்லை” என்று தெரிவித்தார்.

Copyright © 5965 Mukadu · All rights reserved · designed by Speed IT net