மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்!

அசாம் மாநிலத்தில் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்!

அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அசாம் மாணவர்கள் சங்கத்தினரால் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கௌஹாத்தி விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் சென்ற மோடிக்கு, எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் “GO BACK TO MODI“ என கோஷங்கள் எழுப்பி குறித்த போராட்டத்தினை மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் அதிகரித்துள்ளன.

இதேவேளை, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் குடியுரிமை சட்டமூலத்தை நேரடியாகவே எதிர்த்துள்ள நிலையில் மிசோரமில் குடியரசு தினமும் புறக்கணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net