இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலிகளாம்!

இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலிகளாம்! இதில் உங்க நட்சத்திரமும் இருக்கா?

நம்முடைய பிறந்த ராசி எப்படி நம் தலையெழுத்தை தீர்மானிக்கிறது என்று நம்பப்படுகிறதோ அதுபோலவே நமது பிறந்த நட்சத்திரமும் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்று சொல்லப்படுகின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது.

இதில் இந்த அனைத்து நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்கள் என்று கூறமுடியாது. ஏனெனில் இதில் சில நட்சத்திரங்கள் துரதிர்ஷ்டமான நட்சத்திரங்களாக இருக்கிறது.

அதேபோல சில நட்சத்திரங்கள் இயற்கையாகவே அதிர்ஷ்டம் அதிகமுள்ள நட்சத்திரமாக கருதப்படுகிறது.

தற்போது இதில் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரம் அக்னி பகவானால் ஆளப்படும் நட்சத்திரம் ஆகும். நாம் அனைவரும் நன்கு அறிவோம் அக்னி ஒரு புனிதமான பொருளென்று, இது தூய்மைப்படுத்துவதையும், தெளிவுப்படுத்துவதையும் செய்கிறது.

அக்னி பகவான் ஆளும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் பிரகாசம் நிறைந்திருக்கும். மேலும் இவர்களுக்கு புத்திக்கூர்மையும், சுறுசுறுப்பும் பிறக்கும் போதே உடன்பிறந்தவையாக இருக்கும்.

திருவோணம்

திருவோண நட்சத்திரமானது விஷ்ணு பகவானால் ஆளப்படுகிறது. காக்கும் கடவுளான விஷ்ணு பகவான் உங்கள் வாழ்க்கையில் விரிவாக்கம், வளம், ஞானம் மற்றும் வெளிப்படையான குணம் போன்றவற்றை வழங்குவார்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஷ்ணுவின் அருளை பூரணமாக பெற்றவராக இருப்பார்கள்.

புணர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரமானது அதிதி தேவியால் ஆளப்படுகிறது. அனைத்து நற்குணங்களுக்கும் கடவுளாக விளங்குபவர் அதிதி தேவிதான்.

திவ்யத்துவங்களின் ஒட்டுமொத்த உருவமும் இவர்தான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தன்னை சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

மேலும் அவர்களின் தனிப்பட்ட நற்குணங்கள் அவர்களுக்கு அனைத்து சிறப்பையும் பெற்றுத்தரும்.

மகம்

மக நட்சத்திரம் பித்ரு பக்ஷவால் ஆளப்படுவதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலிமையான உடலும், ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்களாக இருப்பார்கள்.

எப்போதும் தங்கள் கடமையை செய்வதில் இருந்து இவர்கள் ஒருபோதும் தவறமாட்டார்கள்.

பூசம்

பூச நட்சத்திரமானது பிரஜாபதியால் ஆளப்படுவதாகும். எச்சரிக்கை உணர்வும், புத்திக்கூர்மையும் இவர்களுக்கு கிடைக்க பெற்ற வரங்களாகும்.

எதிர்மறை எண்ணங்களையும், செயல்களையும் கடந்து வர இவர்கள் கடுமையாக முயலுவார்கள். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இவர்கள் சிறந்தவர்களாக இல்லாவிட்டாலும் இவர்களின் வாழ்க்கை குறையின்றி இருக்கும்.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தின் கடவுள் விஷ்வதேவர் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்மம், நல்வாழ்வு மற்றும் நல்ல குணத்தால் கட்டுப்படுத்தப்படுவார்கள்.

அவர்கள் கடைபிடிக்கும் தர்மம் அவர்களை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்து செல்லும்.

ஸ்வாதி

ஸ்வாதி நட்சத்திரம் வாயுபகவானால் ஆளப்படுவதாகும். அனைத்து மக்களுக்கும் தெரியும் வாயுபகவான் கட்டுப்படுத்தும் காற்றானது நமது வாழ்விற்கு அடிப்படையானது என்று.

நமது உள்புறம் மற்றும் வெளிப்புற வாழ்வு இரண்டையும் இணைக்கும் பாலமாக காற்று நம்பப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலிமை மற்றும் சக்தியின் பிறப்பிடமாக கருதப்படுவார்கள்.

விசாகம்

விசாக நட்சத்திரம் இந்திரன் மற்றும் அக்னி பகவானால் ஆளப்படும் அதிர்ஷ்ட நட்சத்திரமாகும். இந்த இரண்டு கடவுள்களும் அரசியல் மற்றும் ஆன்மீகத்தை பிரதிநிதித்துவபடுத்துபவர்கள்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள், இவர்களுக்கு கூட்டுத்தொழில் நன்றாக வரும். இவர்களின் வளர்ச்சி இவர்களுக்கு எப்பொழுதும் முன்மாதிரியாக விளங்கும்.

Copyright © 7492 Mukadu · All rights reserved · designed by Speed IT net