நான் இன்னும் சில வருடங்களே உயிரோடு இருப்பேன்!

நான் இன்னும் சில வருடங்களே உயிரோடு இருப்பேன்!

“நான் இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்” என தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான வைகோ தெரிவித்துள்ளமை பலரை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது.

திருச்சியில், உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றும் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் உரையாற்றும்போது, மாணவர்களைப் பார்த்து தம்பிகளே என்று கூறினார், பிறகு திடீரென மாணவர்களைப் பார்த்து உங்களை தம்பிகளே என்று கூப்பிடக்கூடாது, எனக்கு வயது அதிகம், உங்கள் வயதில் எனக்கு பேரன் இருக்கின்றான் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வைகோ திடீரென மகாத்மா காந்தியின் தியாகம் பற்றி கூறினார். காந்தியின் நினைவு தினத்தன்று இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியது குறித்து பேசினார்.

அதன்பின்னர், வைகோ திடீரென நா தழு தழுக்க பேசி கண்கள் கலங்கி கதறி அழுதுவிட்டார். காந்தியின் உருவத்தை சித்தரித்த விதம் குறித்து பேசும்போது கண் கலங்கியபடியே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய வைகோ, “நான் ஓர் போராளி, எனக்கு தோல்வியே கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வருகிறேன்.

மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும்தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net