வடக்கில் 700 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நுண்நிதி கடன்கள் தள்ளுபடி!

வடக்கில் 700 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நுண்நிதி கடன்கள் தள்ளுபடி!

நுண்நிதி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத 700 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் கடனை திரும்ப செலுத்த வேண்டியதில்லை. அற்கான சான்றிதழ்கள் நாளை மறுநாள் (14) வியாழக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வழங்கப்படும்.

நிதியமைச்சர மங்கள சமரவீர தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறும்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், நுண்நிதி கடன் தொடர்பாகவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிக வட்டியால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருப்பதையும், இதற்காக பாலியல் இலஞ்சம் அவர்களிடம் கோரப்படுவதையும் அறிக்கையிட்டிருந்தார்.

அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே, அரசாங்கம் 700 பேரின் நுண்நிதி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. வடக்கில் கடன் பெற்று, செலுத்த முடியாதவர்களின் கடன்களே தள்ளுபடி செய்யப்படுகிறது.

2018ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், நுண் நிதி கடன்களை தள்ளுபடி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக வடக்கில் 700 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெற்ற நுண்நிதி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடக்கும் நிகழ்வில் இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net