சசிகலா விடுதலை ஆகிறார்!

சசிகலா விடுதலை ஆகிறார்!

சிறை நன்னடத்தை விதிகளின்படி பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விரைவில் விடுதலை ஆகிறார் என்ற தகவல் ஒன்று கசிந்துள்ளது .

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வரும் 15ஆம் தேதியுடன் 2 வருட சிறைத்தண்டனையை அவர் நிறைவு செய்கிறார்.

இன்னும் 2 வருட சிறைவாசம் இருக்கும் நிலையில், கர்நாடக மாநில சிறை சிறைத்துறை விதிகளின்படி, நன்னடத்தை அடிப்படையில், மூன்றில் இரு பங்கு சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை, முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் விரைவில் அவர் விடுதலை செய்யப்படலாம் என்று பரபரப்பான தகவல்கள் பரப்பன அக்ரஹார சிறைவட்டாரத்திலிருந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

Copyright © 5580 Mukadu · All rights reserved · designed by Speed IT net