டிக் டாக் சமூகவலைத்தள செயலி விரைவில் தடை !

டிக் டாக் சமூகவலைத்தள செயலி விரைவில் தடை !

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களிடையே பரவி வந்த டிக் டாக் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவோரை அடிமையாகியது.

தங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு நடனம் ஆடியும் பிடித்த வசனங்களை டப் செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட இந்த ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த தொடங்கப்பட்ட இந்த செயலி சமீபகாலமாக ஆபாசங்களுக்கு வழிவகுப்பதாக தமிழக சட்டப்பேரவையில் நிதி பங்கீடு மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தமீமுன் அன்சாரி, டிக் டாக் ஆப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் ப்ளூவேல் சர்வரை தடைசெய்ததை போல டிக்டாக் செயலியையும் தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Copyright © 1805 Mukadu · All rights reserved · designed by Speed IT net