வடக்கு-கிழக்கில் தாதியர்களின் தட்டுப்பாடு!

வடக்கு-கிழக்கில் தாதியர்களின் தட்டுப்பாடு; ஜூன் மாதம் நிவர்த்தி செய்யப்படும்!

இந்த வருடம் ஜூன் மாதம் 1500 தாதியர்கள் பயிற்சியை முடித்து வெளியாக இருப்பதால் அவர்களை கொண்டு வடக்கு-கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சீன நிதி உதவியின் கீழான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

நான் பிரதி அமைச்சரான போது சம்மாந்துறைக்கும் பொத்துவில்லுக்கும் வைத்தியசாலைக் கட்டடங்கள் அமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்துள்ளது.

இந்த கட்டடத்தை மாத்திரம் அமைப்பதற்கு 554 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 554 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

இதற்கு அப்பால் இன்னும் 50 வருடங்களுக்கு பொத்துவில்லுக்கு எந்தவொரு வைத்தியசாலை கட்டடங்களோ உபகாரணங்களோ தேவை இல்லை.

குறைந்தது 25 வருடங்கள் நிலைத்து நிற்கும் வகையில்தான் நாம் எமது சேவைகளை செய்து வருகிறோம்.

நான் அமைச்சராக ஆனது முதல் இந்த வைத்தியசாலையின் தேவைக்காக 75 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net