வடக்கின் பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ்கள்.

வடக்கின் பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ்கள்.

சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கான 17 அம்பியூலன்ஸ் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அலுவகத்தில் இடம்பெற்றது..

இவ் நிகழ்வுக்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் கலந்து கொண்டு இவ் அம்பியூலன்ஸ் வண்டிகளை உரிய சுகாதார வைத்திசாலை வைத்தியர்களிடம் கையளித்தார்..

இதில் மாவட்டங்களுக்காக யாழ்ப்பாணம் 08 வண்டிகளும்,கிளிநொச்சி 03 வண்டிகளும்,மூல்லைத்தீவு 02வண்டிகளும்,மன்னார் 03 வண்டிகளும்,வவுனியா 01 வண்டிகளும் ஆதார,பிரதேச,மாவட்ட ஆகிய வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன..

இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆர்.கேதீஸ்வரன்,மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார்,மற்றும் அமைச்சின் உயர்அதிகாரிகள்,வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டனர்..

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net