வடமாகாணம் பொருளாதாரத்தில் வளா்ச்சியடைய இதுதான் வழி!

வடமாகாணம் பொருளாதாரத்தில் வளா்ச்சியடைய இதுதான் வழி!

பலாலி விமான நிலையம், மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை புனரமைப்பு செய்து பிராந்திய மற்றும் வா்த்தக விமான சேவை அதேபோல் பயணிகள் மற்றும் வா்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் ஊடாகவே வடமாகாணம் பொருளாதார வளா்ச்சியடைய முடியும். அதற்கான கோாிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள் அரசுக்கு வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு எஸ்.மனோகரன் என்ற யாழ்ப்பாண வா்த்தகா் ஒருவா் பகிரங்க கோாிக்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றாா்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளா்களை சந்தித்து அவா் இந்த கோாிக்கையினை முன்வைத்திருக்கின்றாா்.

இதன்போது அங்கு அவா் கருத்து தொிவிக்கையில் கூறியதாவது, வடமாகாணம் பொருளாதார மட்டத்தில் தாழ்ந்து காணப்படுகிறது.

இதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எதனையும் அரசியல்வாதிகளும் எடுக்கவில்லை, அரசும் எடுக்கவில்லை. எமது மக்களுக்கு நிவாரண ம் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

அதற்கு பதிலாக புதிய தொழில் முயற்சிகளை ஏற்படுத்துவதுடன் வடக்கில் அதிகளவான முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாட்டை செய்யவேண்டும்.

மேலும் வடமாகாணத்தின் பொருளாதா வளா்ச்சிக்கும், தேசிய பொருளாதாரத்தில் வடமாகாணம் தவிா்க்க முடியாத ஒரு அங்கத்தை வகிப்பதற்கும் வடக்கில் பாாிய முதலீடுகள் செய்வது மட்டுமல்லாமல், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன அபிவிருத்தி செ ய்யப்பட்டு, அதன் ஊடாக குறிப்பாக பலாலி விமான நிலையம் ஊடாக பயணிகள் சேவை மற்றும் வா்த்தகசேவை, ஆரம்பிக்கப்படவேண்டும்.

அதேபோல் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக வா்த்தக கப்பல்சேவை, மற்றும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பி க்கப்படவேண்டும்.

இதன் ஊடாக எமது உள்ளுா் உற்பத்திகளை வெளி நாடுகளில் சந்தைப்படுத்த பாாிய வாய்ப்புக்கள் கிட்டுவதுடன், உள்ளுா் வியாபாாிகளும் பெருமளவு நிதி வீண் விரயத்தை தவிா்த்து வியாபாரத்தில் முன்னேற்றமடையலாம், மேலும் வருடாந்தம் பெருமளவான மக்கள் வடமாகாணத்தில் இருந்து இந்தியாவுக்கு செல்கின்றனா்.

அதேபோல் புலம்பெயா் நாடுகளில் இருந்து பெருமளவான மக்கள் வருடந்தோறும் இலங்கைக்கு வந்து செல்கின்றாா்.

அவா்கள் கொழும்பில் இறங்கி பின்னா் யாழ்ப்பாணம் வந்து பெரும் பயண சிரமம் மற்றும் பண விரயத்தை சந்திக்கும் நிலை பலாலி விமான நிலையம் திறப்பதன் ஊடாக தவிா்க்க முடியும்.

இதேபோல் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைப்பு செய்வதன் ஊடாகவும் அதிகளவான நன்மைகளை வடமாகாண மக்கள் பெற்றுக் கொள்ள இயலும்.

இதற்கு புலம்பெயா் தமிழா்களும், வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அதிகளவான அழுத்தங்களை கொடுக்கவேண்டும். அதன் ஊடாகவே வடக்கு மக்கள் பொருளாதார மட்டத்தில் மேம்பட முடியும் என்றாா்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net