காரைதீவில் பதற்றம் : பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன்!

காரைதீவில் பதற்றம் : பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன்!

அம்பாறை – காரைதீவு கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட இளைஞனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இளைஞர் ஒருவர் தனியாக சென்ற பெண்ணை பின் தொடர்ந்து அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இந்த விடயம் அவ்வீதியால் சென்ற இளைஞர்களின் பார்வைக்கு பட்டதால் உடனே, ஊர் இளைஞர்கள் பலர் ஒன்று கூடி சந்தேகநபரை மடக்கி பிடித்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிடிக்கப்பட்ட இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இரவு நேரங்களில் கடைகளுக்கும், பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான சம்பவங்கள் அம்பாறை மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றன.

இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்ல அச்சமடைவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net