மன்னார் மனிதப் புதைகுழி! சிறு பிள்ளையின் மனிதக்கூடு மீட்பு!

மன்னார் மனிதப் புதைகுழி! சிறு பிள்ளையின் மனிதக்கூடு மீட்பு!

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்று முன்னெடுக்கப்பட்டபோது சிறு மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறு பிள்ளை ஒன்றினுடையது எனக் கூறப்பட்டுள்ளது.

குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடு 18 வயதுக்குற்பட்ட சிறுவருடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த மனித புதைகுழியில் 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 307 மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net