எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கார்பன் அறிக்கைக்காக காத்திருக்கும் இலங்கை?

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கார்பன் அறிக்கைக்காக காத்திருக்கும் இலங்கை?

கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) குறித்த அறிக்கை மன்னார் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் என அகழ்வுக்குப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த காபன் ஆய்வு அறிக்கை, குற்றம் நடந்ததாக சந்தேகிக்கப்படும் காலத்தை மாத்திரம் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினரும் இந்த அறிக்கையினை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், குறித்த அறிக்கை இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுமென நம்பப்படுகின்றது.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 316 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என்றும் அகழ்வுக்குப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net