கண்டி தலதா மாளிகைக்கு வட மாகாண ஆளுநர் திடீர் விஜயம்.

கண்டி தலதா மாளிகைக்கு வட மாகாண ஆளுநர் திடீர் விஜயம்.

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று விஜயமொன்றை மேற்கொண்டு, வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார்.

இதன்போது ஆளுநர் புனித தந்ததாதுவினை தரிசித்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

அத்துடன் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை ஆளுநர் சுரேன் ராகவன் சந்தித்து ஆசீர்வாதங்களையும் பெற்றக்கொண்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net