கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு!

கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் சொத்து இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நட்டஈடு வழங்கி வைக்கப்படவுள்ளது.
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பெருந்தொகையான வயல் நிலங்கள் அழிவிற்குள்ளான நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு காப்புறுதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இக்கூட்டத்தின் நிறைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலைகள் பிரதமரினால் வழங்கி வைக்கப்படவுள்ளது.