சிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது!

சிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது!

ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

மக்களின் விடுதலை என்ற நோக்கத்திற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் அதன் ஊடாக பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான டெலோ கட்சியின், மன்னார் மாவட்ட இளைஞர் அணி மாநாடு மற்றும் நிர்வாக தெரிவு நேற்று(வியாழக்கிழமை) மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கூட்டமைப்பைச் சுற்றி பல எதிரிகள் உருவெடுத்துள்ளனர். சிங்கள சக்திகளே எமது எதிரிகள் என்று பார்த்தால் தமிழ் தரப்பும் உள்ளது. இன்றைக்கு ஒவ்வெருவரும் கட்சிகளை ஆரம்பிக்கின்றார்கள்.

அவர்களின் பேச்சுக்களை பார்த்தால் தென் இலங்கை, இராணுவம் மற்றும் அரசாங்கத்தை பாரிய அளவில் விமர்சிப்பதாக இல்லை.

ஆனால் அவர்கள் விமர்சனம் செய்கின்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பு. ஆனால் நாங்கள் என்றைக்கும் விலை போனவர்கள் இல்லை.

இன்றைக்கு அதனை பலவீனப்படுத்துகின்ற வகையிலே எங்களுக்குள் நாமே பிளவுபட்டுள்ளோம்.

நான் ஒற்றை ஏற்றுக்கொள்ளுகின்றேன். தமிழ் தேசியக்கூட்டமையில் ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது.

இதுவே எதிரிகளுக்கு வாய்ப்பையும் கொடுக்கின்றது. அனாவசியமான போச்சுக்களை பேசவேண்டாம் என்று சம்மந்தப்பட்டவர்களிடம் கூறிவருகின்றோம்.

இந்த நாட்டிலே வாழுகின்ற ஒரு தமிழன் இந்த நாட்டிலே வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் எங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற போது தான், அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

ஆகவே இந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கின்றது. ஆகவே அந்த நாளை நான் சந்தோசமாக கொண்டாடுகின்றேன் என்ற சிந்தனை எப்போது அவனுக்கு எழுகின்றதோ, அப்போது தான் அதனை கொண்டாட முடியும்.” என கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net