138 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி அபிவிருத்தி பணி முன்னெடுப்பு.

138 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி அபிவிருத்தி பணி முன்னெடுப்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சிபாரிசின் அடிப்படையில் கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக 138 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரெழிச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, கரைச்சி பிரதேசசபையினால் முன்மொழியப்பட்ட வேலைத் திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பரிந்துரைக்கு அமைய இந்த நிதிகள் கிடைக்கப்பட்டுள்ளன.

வீதிகள், பாலங்கள், கல்வி, மத வழிபாட்டுத்தலங்கள், விளையாட்டுத்துறை என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இத்தகைய நிதி மத்திய அரசினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது தவிசாளர் அ.வேழமாலிகிதன் கருத்து தெரிவிக்கையில்,

2018ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபைக்கு கிடைக்கப்பட்ட 52 மில்லியன் ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் சிறப்புற நிறைவு பெற்றிருக்கிற இவ் வேளையில் மீண்டும் 138 மில்லியன் ரூபாய் கரைச்சி பிரதேசசபைக்கு கிடைக்க பெற்றிருப்பதன் காரணமாக பல்வேறு வகையான அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க கூடியதாக இருக்கிறது.

இதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வருகின்ற மார்ச் மாத ஆரம்பத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராம மக்களின் பங்கு பெற்றலில் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net