இன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

இன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது.

இன்று காலை 6.10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்துள்ளார்.

இதனையடுத்து ரயில் சாரதி திடீரென ரயிலின் வேகத்தை குறைத்து கடவை கதவுக்கு அண்மையில் ரயிலினை நிறுத்தினார். இந்நிலையில் வாகனங்கள் சென்று 10 நிமிடங்கள் பின்னரே ரயில் சென்றது.

குறித்த ரயில் சாரதியின் சமயோகிதத்துடன் செயற்பட்டமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கடவை காப்பாளரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

Copyright © 1644 Mukadu · All rights reserved · designed by Speed IT net