பிரதமர் தலைமையில் முல்லைத்தீவில் மீளாய்வு கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஒருங்கிணைப்பில் இக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, குடிநீர், கல்வி, சுகாதாரம், விவாசாயம், வைத்திய சேவைகள் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டுள்ளதோடு, பூர்த்தியாகாத திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
மேலும், முல்லைத்தீவில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
வனவளபாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களங்கள் எல்லையிட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களான றிசாட் பதியுதீன், வஜீர அபேவர்த்தன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நகரசபை பிரதேச செயலாளர்கள என பலர் கலந்து கொண்டிருந்தனர்.













