முள்ளிக்குளத்தை படையினர் விடுவித்தால் ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யமுடியும்!
சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாண விஜயத்தை மேற்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் அடுத்து கிளிநொச்சி மன்னார் என சென்று மீளாய்வு கூட்டங்கள் மற்றும் அபிவிருத்திசார் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தின்போது தமிழ் கிறிஸ்த்தவ மக்களின் பாரம்பரிய நிலமான முள்ளிக்குளத்தில் படையினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பகுதிக்குள் நான்கு குளங்கள் உள்ளன.
இந்த குளங்களை புனரமைத்தால் சுமார் ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நடிவடிக்கைகளில் ஈடுபடலாம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை சிலாவத்துறை கடற்படை முகாம் நீண்டகாலமாக அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மற்றும் வனவளத்துறையில் செயற்பாடுகளால் 1990ம் ஆண்டு காலப்பகுதிகளில் அகதிகளாகி ஊர்களை விட்டு வெளியேறிய மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருப்பதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வனவளத்துறையினரால் சுற்றுலா மீன்பிடித்துறையும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






