ரணில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

ரணில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த போராட்டகாரர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவிற்கு மாவட்ட செயலத்தில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கி தமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை கேப்பாபுலவில் 716ஆவது நாளாக நிலமீட்டு பேராட்டம் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net