தமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்!

தமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்!

தமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் நிகழ்வில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இளைஞர்களின் செயற்பாடுகள், நாட்டில் எந்நிலையில் உள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும் தமது மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விடயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டம், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம். ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு எப்படி இருக்கின்றது என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆகையால் எதிர்காலத்தில் எமது மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தீர்த்து வைக்கும் வகையில் இளைஞர்களை தயார்ப்படுத்தும் செயற்பாட்டை தற்போது ஆரம்பித்துள்ளோம்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net