சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்!

உரிய தீர்வுகளை வழங்காமல் யுத்த குற்றங்களை மறந்து செயற்படுமாறு பிரதமர் கோருவது, தமிழர்களுக்கான நீதியை பறிக்கும் செயல் என ஈ.பி.ஆர்.எல்.எப். தெரிவித்துள்ளது.

யாழில் அமைந்துள்ள, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனது வீட்டில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“தமிழர்கள் விடயத்தில் எந்த தீர்வும் வழங்கப்படாது நிர்க்கதியற்று வாழும் நிலையில், அவற்றிற்கான முடிவு அனைத்தையும் மறந்துவிடுமாறு ஒரு நாட்டின் பிரதமர் கூறுவதா?

இராணுவத்தினரை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

தமிழர்கள் விடயத்தில் முதலில் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் மன்னிப்பு வழங்குவது குறித்து தமிழ் மக்கள் யோசனை செய்ய முடியும்.

ஆனால் எந்தவொரு தீர்வும் வழங்கப்படாது அனைத்தையும் மறந்துவிடுமாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.

Copyright © 4641 Mukadu · All rights reserved · designed by Speed IT net