பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு

பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி சேகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவ முகாம் பகுதியில், பிள்ளையார் கோயில் அமைப்பதாக தெரிவித்து இராணுவத்தினரால் நிதி திரட்டப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நடவடிக்கை கடந்த இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாலி கூட்டுப்படைத் தளப்பகுதியில் பிள்ளையார் கோயில் அமைக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு வர்த்தக நிலையங்களில் பணம் திரட்டப்படுகின்றது.

சுன்னாகம் வர்த்தக சங்கத்திற்குட்பட்ட வர்த்தக நிலையங்களிலேயே சீருடையில் செல்லும் படையினர் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்து கோயில்கள் பலவற்றை ஆக்கிரமித்து பௌத்த ஆலயங்கள் அமைக்கும் நிலையில், அது தொடர்பாக பல்வேறுப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதனால், அதனை தவிர்க்கும் நோக்கில் படையினர் இவ்வாறு செயற்படுவதாக கூறப்படுகின்றது.

Copyright © 2596 Mukadu · All rights reserved · designed by Speed IT net