இந்தியா புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் பல இராணுவ வீரர்கள் பலி.

இந்தியா புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் பல இராணுவ வீரர்கள் பலி.

இந்தியாவில் தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் இன்று நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை துணை இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.

இதனால் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், இது போன்ற கொடூர செயலில் இறங்கிய அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்டம் பிங்லான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், துணை இராணுவவீரர்கள் மீது தாக்குதல் நடத்த துணைபுரிந்தவர்களாக இருக்கலாம் என ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, காஷ்மீர் மாநில பொலிசாரும், இராணுவத்தில் 55 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவினரும் இணைந்து இன்று அதிகாலை பிங்லான் கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.

ராணுவத்தினர், பொலிசார் சுற்றிவளைத்தது அறிந்ததும், தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இதற்கு ராணுவத்தினரும் தக்கபதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 3 தீவிரவாதிகளை உயிருடன் பிடித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால், மக்கள் யாரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net