கிளிநொச்சி விவேகானந்த நகர் மத்திய வீதி புனரமைப்பு வேலைகளில் மோசடி

கிளிநொச்சி விவேகானந்தநகர் மத்திய வீதி புனரமைப்பு வேலைகளில் மோசடி மற்றும் தரமற்ற வீதி செப்பனிடல் ஆகியவற்றை கண்காணிக்க கோரி இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் விவேகநந்தாநகர் கிராம மட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் பெரும் தொகை நிதியில் வடமாகாண சபை முன்னால் உறுப்பினர் த.குருகுலராஜா அவர்களின் நிதி ஒதுக்கீட்ல் 1300m வீதி புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியினை அதிகளவானோர் பயன்படுத்தி வருவதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், உரிய முறையில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அந்த வீதி புனரமைப்பில் தரமற்ற வகையில் புனரமைப்ப பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அதிகாரிகளின் கண்காணிப்பில்லாது பணிகள் ஒப்பந்தகாரர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net