மண்முனை பிரதான வீதியில் விபத்து: இரு பிள்ளைகளின் தந்தை பலி!

மண்முனை பிரதான வீதியில் விபத்து: இரு பிள்ளைகளின் தந்தை பலி!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மண்முனை பிரதான விதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று காலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நாவற்குடாவைச் சேர்ந்த ம.ஜெயக்குமார் எனும் 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கொக்கட்டிச்சோலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஒல்லிக்குளம் பகுதியில் வைத்து எதிரே வந்த சிறிய ரக லொறியுடன் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நபரை ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேச பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net