மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!

மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!

வாக்கு சேகரிக்க வரும் மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு ஸ்ரீ வாசுகி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மொட்டுக்கட்சியினர் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க தமிழர்களிடம் வருகின்றனர்.

அவருக்கு வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் நம்மவர்களில் சிலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களை கடத்தியமை, காணாமலாக்கியமை, நிலங்களை அபகரித்தமையென பல்வேறுப்பட்ட அநீதிகளை மேற்கொண்டவர்கள் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் வாக்குக்காக வருவார்கள்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net