யாழ் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்.கீரிமலை கடற்கரையில் சடலம் ஒன்று காணப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.

எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் பின் சடலத்தை மீட்பதற்கான பணிகளை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனா்.

இதேவேளை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடைய சடலமே காணப்பட்டதாகவும், அரை காற்சட்டையுடன் சடலம் காணப்படுவதாவும் கூறப்படுவதுடன், சடலம் கடலில் மிதந்து வந்தா? அல்லது நீராட சென்று உயிரிழந்தவருடையதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net