கிளிநொச்சியில் 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றும் கற்றல் உதவிகள்

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றும் கற்றல் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றம் கற்றல் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் அ.சத்தியானந்தன் அவர்களின் ஊடாக புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட 5 லட்சம் பெறுமதியான உதவிகள் இன்று கிளிநொச்சி மருதநகர் பகுதி மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பா ம உறுப்பினர் சிறிதரன் கலந்து கொண்டு கால்நடைகள் மற்றம், கற்றல் உதவிகளை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வை தொடர்ந்து பா ம உறுப்பினர் சிறிதரன் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். குறித்த சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்தார்.

இரணைமடு குளத்திலிருந்து யாழிற்கு குடிநீர் எடுத்து செல்லலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து காணாமல்போனோர் விடயம், ஐநா மனித உரிமை விடயங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பிலம் அவர் குறிப்பிட்டார்.

ஐநா மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படும் என்ற விடயம் தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவித்த வருவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார். கால அவகாசம் அல்ல, குறித்த விடயங்களை கையாள்வதற்கு தேவைப்பாடும் காலம், எந்த நாடு கையாளப்போகின்றது என்பது தொடர்பில் அது அமையும். அதனை கால அவகாசமாக பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். வழங்கப்பட்ட காலப்பகுதியில் அரசு எதையும் செய்திருக்கவில்லை என்பது தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.

இறுதி யுத்தம் மாத்திரம் அல்ல. சிறுபான்மை இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நீதி கோரி சர்வதேசத்திடம் கூட்டமைப்பினராக வலியுறுத்தி வருகின்றீர்கள். இந்த நிலையில் யுத்த குற்றங்கள் மாத்திரமல்ல சிறுபான்மை இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை விடயங்கள் உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஐக்கியதேசிய கட்சியின் ஆட்சி காலத்திலும் இடம்பெற்றுள்ளது.

இச்சூழலில் நீங்கள் அந்த அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு மனித உரிமை விடயங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் உதவியோடு வலியுறுத்தும்போது அது தமிழ் மக்களிற்கு பலவீனமாக இருக்குமல்லவா என அவரிடம் வியவியபோது,
அது தாக்கம் செலுத்தும் என கூறமுடியாது.

2015ம் ஆண்டுவரை இடம்பெற்ற சூழலிலிருந்து மீள வேண்டி நிலை ஏற்பட்டது. அவ்வாறான நிலையில் புதிய அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த அரசாங்கத்தின் காலத்தில் மக்கள் தமது உரிமைக்காக போராட கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டது.

அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. காணிகள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் அண்மையில் மகிந்த ராஜபக்ச அரசாட்சி அமைப்பதை தடுக்கவே புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினோம்.

இந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவோடும், சர்வதேசத்தின் ஆதரவோடும் செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net