ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் தூதுக்குழு உறுப்பினர்கள் யார்?

ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் தூதுக்குழு உறுப்பினர்கள் யார்?

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் நாளை மறுதினம் இடம்பெறும் தமது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“தற்போது ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ள நிலையில், அது குறித்து ஆராய வேண்டியுள்ளதாக” கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையின் பொறுப்புக்கூறல், மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

பிரித்தானியா இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று ஜெனிவா நோக்கி பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net