தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.

தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டம் நேற்று இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து ஆர்வத்துடன் அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, தலைவர் லோ.தீபாகரன்,செயலாளர் க.சசீந்திரன்,பொருளாளர் ம.நிலக்சன் , உபதலைவர் து.மதன் , உபசெயலாளர் பாலசிங்கம் முரளிதரன், கல்வி தே.மயூரன், விளையாட்டு துறை த.கிருஷ்ணகாந், சுகாதாரம் தேவசிங்கம் திலக்சன், கலைகலாரம் த.இன்பராசா, நலன்புரி த.விமலராஷ், சமூகசெயற்பாடு இரா.சாணக்கியன், முன்னாள் போராளிகள் தொடர்பான விடயம் எஸ்.ஜனார்த்தனன், மாற்றுத்திறனாளிகள் விடயம் கே. சோபனன், பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்கள் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கை அ.கிருரஜன், அனர்த்த முகாமைத்துவம் ந.துஷ்யனதன், அரசியல் விழிப்புணர்வு கி.சேயோன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை, இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராசா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net