பெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுக்க முயன்றதாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுக்க முயன்றதாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி சமந்தா செபநேசராணியின் தேக்கவத்தைப் பகுதியிலுள்ள வீட்டிற்குள் இரவு 11மணியளவில் அத்துமீறி நுழைந்து கொலை செய்ய முயற்சித்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகநகரசபைஉறுப்பினர் தெரிவித்துள்ளார். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நகரசபை உறுப்பினரான திருமதி சமந்த செபநேசராணியின் தேக்கவத்தை வீட்டிற்குள் இளைஞன் ஒருவர் தனக்கு களங்கம் எற்படுத்தும் நோக்கிலும், கொலை அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கிலும் இரவு 11மணியளவில் வீட்டுவளவிற்குள் நுழைந்துள்ளதாக இன்று பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குறித்த இளைஞனின் அடையாளங்கள், விபரங்களையும் பொலிசாரிடத்தில் வழங்கியுள்ளார். 

குறிப்பாக தனது செயற்பாடுகள் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனைத்தடுக்கும் நோக்கிலும் தனக்கு அவமானம் களங்கம் ஏற்படுத்தவும் தன்னைக் கொலை செய்யும் எண்ணத்துடனும் குறித்த இளைஞன் தனது வீட்டு வளவிற்குள் இரவு 11மணியளவில் வந்திருக்கலாம் அவர் தொடர்பாக அடையாளங்கள், விபரங்கள் என்பனவும் பொலிசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் பொலிசார் பக்கச்சார்பின்றி விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net