வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்?


வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்?

வடபகுதியில் இடம்பெறும் பௌத்த ஊடுறுவலை தடுப்பது தொடர்பாக, வவுனியாவில் இடம்பெறும் பௌத்த மாநாட்டில் கலந்துரையாடப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வவுனியாவில் நடத்தப்படவுள்ள பௌத்த மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கியபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் வடக்கில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும், பௌத்த மதத் தலைவர்கள், அநாவசியமான பௌத்த ஊடுறுவல்கள் ஏற்படுவதற்கு எதிராக உறுதியுடன் செயற்படுவதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்வரும் காலங்களில் குறித்த ஊடுறுவல் இருக்கும் என்றால் இவர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வை பெறவே இந்த மாநாடு வவுனியாவில் இடம்பெறுகின்றது என கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net