திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு!

திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு!

சாவகச்சேரி உணவகத்தில் திருடிய பணத்தில் சந்தேகநபர் ஒருவர் வாங்கிய ஒரு தொகுதி பொருட்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருகில் இருந்த உணவகத்தில் ஏழு லட்சம் ரூபா பணமும் மூன்று இலட்சம் பெறுமதியான தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளும் திருடப்பட்டன.

இந்த திருட்டில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவரை உணவக உரிமையாளரின் உதவியுடன் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடும் போது அணிந்திருந்த உடை, சுமார் மூன்று லட்சம் பெறுமதியான வீட்டு தளபாடங்கள் மற்றும் மோட்டார்ச் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் அணியினர் மேற்கொண்டுள்ளனர்.

Copyright © 6211 Mukadu · All rights reserved · designed by Speed IT net