கஞ்சிபான இம்ரானின் பிரதான சகா கைது!

கஞ்சிபான இம்ரானின் பிரதான சகா கைது!

துபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரரான கஞ்சிபான இம்ரானின் பிரதான சகா எனக் கூறப்படும் ஒருவர் கொலன்னாவை சாலமுல்ல பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழிக்கும் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மொஹமட் நவ்பர் மொஹமட் அலி என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 10.48 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரபல பாதாள உலகக்குழு தலைவரும் போதைப் பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷ் துபாயில் ஹொட்டல் ஒன்றில் நடத்திய விருந்தின் போது, அவருடன் கஞ்சிபான இம்ரான் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net