கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன்.

கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் – வே. சிவஞானசோதி

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மறுவாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 200 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. என இவ்வமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வீதிகள், வணக்கஸ் தலங்கள், விளையாட்டு மற்றும் உட்கட்டுமான அபிவிருத்திகளுக்கு இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்றும் மாவட்டச் செயலகங்கள் ஊடாக இந் நிதி விடுவிக்கப்பட்டு குறித்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net