பிரதமரின் கருத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!

பிரதமரின் கருத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!

யுத்தம் முடிவடைந்தும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இனப்படுகொலைகள் மறக்கக்கூடிய விடயம் அல்ல. யுத்தத்தினால் உறவுகளை காவு கொடுத்த பெண்கள் குடும்ப சுமை காரணமாக சிரமத்திற்குள் வாழ்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

சுதந்திரம் கிடைத்ததாக கூறப்பட்டாலும் எமது மக்களுக்கு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் பழையதை எவ்வாறு மக்கள் மறப்பார்கள் அல்லது மன்னிப்பார்கள்?” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net