இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!

இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!

இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு துறையான ஐ.எஸ்.ஐ சம்மந்தப்பட்டிருப்பதாக இந்திய இராணுவ தளபதி அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராவல்பிண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை. மேலும் இந்தியாவுடன் போர் புரிவதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தியா ஏதாவது தாக்குதல் நடத்த திட்டமிட்டால் அதற்கு எதிராக கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படுமென மேஜர் ஜெனரல் அசீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 7027 Mukadu · All rights reserved · designed by Speed IT net