யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குல் மேற்கொண்ட நபர்களுக்கு விளக்கமறில்.

யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குல் மேற்கொண்ட நபர்களுக்கு விளக்கமறில்:நீதவான் உத்தரவு.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் கொழும்புக்குத் தப்பி ஓடிவிட்டார் எனவும் மற்றொருவர் தலைமறைவாகியிள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறையை அடுத்து துரித விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக சுப்ரமணியம் தவக்குமார் நியமிக்கப்பட்டார்.

அத்துடன், வவுனியாவிலிருந்து 50 பொலிஸார் மேலதிகமாக அழைக்கப்பட்டனர். அவர்கள் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சம்பவ நடைபெற்ற அன்றைய தினம், பெற்றோல் குண்டு வீச வந்த இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் கருவப்புலம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொலின் மூலம் அடையாளம் காணப்பட்டன.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று கலன் ஒன்றில் பெற்றோல் நிரப்பும் சி.சி.ரி.வி காட்சியும் பெறப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள்கள், கோடாரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன.

சந்தேகநபர்கள் நால்வரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு நேற்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் நால்வரையும் மார்ச் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Copyright © 9381 Mukadu · All rights reserved · designed by Speed IT net