9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்!

9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்: சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்!

ஸ்பெயின் நாட்டில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பிரித்தானிய சிறுமி ஒவ்வாமையால் மரணமடைந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது.

பிரித்தானியாவில் பல் மருத்துவராக பணியாற்றும் வஜித் சிஷ்டி என்பவர் தமது மனைவி மற்றும் 9 வயது மகள் ஹபீபா சிஷ்டி உள்ளிட்ட குடும்பத்தாருடன் கோஸ்டா டெல் சோல் பகுதிக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற சில மணி நேரங்களில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட ஹபீபா சிஷ்டி ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

இதில் சிகிச்சை பலனின்றி ஹபீபா சிஷ்டி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி ஹபீபாவுக்கு நட்ஸ் தொடர்பான ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால் அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த ஐஸ் கிரீம் உணவகத்தில் விசாரித்துள்ளார்.

அவர்களும் ஹபீபாவுக்கு வழங்கப்பட்ட ஐஸ் கிரீமில் நட்ஸ் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, சிறுமி ஹபீபா உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மரண காரணம் ஒவ்வாமை என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மருத்துவர் வஜித் சஷ்டி குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.

Copyright © 6465 Mukadu · All rights reserved · designed by Speed IT net