கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது.

இன்று காலை 9 மணிக்கு முழங்காவில் இரணைமாதா நகர் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி முழங்காவில் சந்தையை வந்தடைந்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றதுடன் போதைப்பொருள் விழிப்புணர்வு வீதி நாடகம் நடாத்தப்பட்டது.

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியும் கவனயீர்ப்பு போராட்டத்தையும் கிளிநொச்சி மறைக்கோட்டத்தினரின் ஏற்ப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கவிடயம் ஆகும்.

இதில் கிளிநொச்சி மறைக்கோட்டத்திற்குட்பட்ட மக்கள், பொது அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net