பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி தோற்கடிப்பு – ஜனாதிபதி பாராட்டு!

பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி தோற்கடிப்பு – ஜனாதிபதி பாராட்டு!

போதைப்பொருள் கடத்தல் முயற்சியை தடுத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும் விசேட பொலிஸ் அதிரடிப் படைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்கால இளைஞர் சமுதாயத்தை பாதுகாப்பதில் அவர்கள் மேற்கொண்டுள்ள செயற்பாடு கௌரவத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் தொடர்ந்தும் ஆதரவை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொள்ளுப்பிட்டி சந்தைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அப் பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் நின்ற இரு சொகுசு கார்களில் இருந்து 294 கிலோ 490 கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

அதனைக் கடத்த முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டனர். இந்த ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 294.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் பாணந்துறை மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net