திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்

திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்

திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை, பள்ளத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தை திட்டியமையினால் குறித்த இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2905 Mukadu · All rights reserved · designed by Speed IT net