வெடிமருந்துக் குழாய்கள் மீட்பு

வெடிமருந்துக் குழாய்கள் மீட்பு

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோவுக்கும் அதிக தொகையுடைய 11 வெடிமருந்துக் குழாய்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளை பிரிவினரும், மன்னார் பொலிசாரும் இணைந்து மன்னார் சவூத்பார் கரையோர பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெடிமருந்துப்பொருட்கள் மன்னார் பொலிசாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net