காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம் மீது குண்டுவீச்சு!

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம் மீது குண்டுவீச்சு!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது.

இந்திய இராணுவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்காக சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக இந்திய விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net