நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நடிகை குஷ்பு!

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நடிகை குஷ்பு!

நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் பெற்றுள்ள பத்து தொகுதிகளில் விருதுநகரும் இருப்பதால் அந்த தொகுதி குஷ்புவுக்காகவே கேட்கப்பட்டுள்ளதாகவும், குஷ்பு இந்த தொகுதியின் நட்சத்திர வேட்பாளர் என்பதால் ராகுல்காந்தி இந்த தொகுதியில் பிரசாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகின்றது.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் குஷ்புவை களம் இறக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார் என்றும் தமிழ்நாட்டில் முக்கிய தொகுதி ஒன்றில் நிறுத்தி குஷ்புவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் ராகுல்காந்தி தாரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும்பாலான இடங்களில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, “நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை ஆசனம் கேட்கவில்லை. ஒருவேளை தலைவர் ராகுல்காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் மறுக்க மாட்டேன். நிச்சயம் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தமிழ்நாட்டில் குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுபற்றி குஷ்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net