வடக்கின் வேலையற்ற பட்­ட­தா­ரி­க­ளின் சரி­யான புள்ளி விப­ரங்­கள் சேகரிப்பு.

வடக்கின் வேலையற்ற பட்­ட­தா­ரி­க­ளின் சரி­யான புள்ளி விப­ரங்­கள் சேகரிப்பு.

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள வேலை தேடும் பட்­ட­தா­ரி­க­ளின் சரி­யான புள்ளி விவ­ரங்­களை பெறு­வ­தற்கு அவர்­க­ளின் விவ­ரங்­களை சேக­ரிக்­கும் நட­வ­டிக்­கை­யில் பட்­ட­தா­ரி­கள் சமூ­கத்­தி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.

வடக்கு மாகாண வேலை­தே­டும் பட்­ட­தா­ரி­கள் சமூ­கத்­தி­னர் வடக்கு மாகாண ஆளு­ந­ரு­டன் அண்­மை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட கலந்­து­ரை­யா­ட­லின் அடிப்­ப­டை­யில் பட்­ட­தா­ரி­க­ளின் சரி­யான எண்­ணிக்­கையை பெற்­றுக் கொள்­ளும் வகை­யில் இந்த தக­வல் திரட்­டப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகா­ணத்­தில் கடந்த வரு­டத்­தில் இருந்து தற்­போது வரை சுமார் ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட வேலை ­தே­டிய பட்­ட­தா­ரி­கள் அரச நிய­ம­னங்களைப் பெற்­றுள்­ளார்­கள்.

இத­னால் தற்­போது வேலை­தே­டும் பட்­ட­தா­ரி­க­ளின் விவ­ரங்­களை பெற­வேண்­டி­யுள்­ளது. எனவே பட்­ட­தா­ரி­கள் தங்­கள் பட்­டச் சான்­றி­தழ் பிர­தி­களை ஒப்­ப­டைப்­ப­தன் மூலம் இந்த விவ­ரங்­களை வழங்க முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை யாழ்ப்­பாண மாவட்ட செய­ல­கம் முன்­பாக நேற்­று­முன்­தி­னம் முற்­ப­கல் 9.30 தொடக்­கம் 4.30 மணி­வரை விவ­ரங்­களை சேக­ரிக்­கும் பணி­யில் வடக்கு மாகாண வேலை­தே­டும் பட்­ட­தா­ரி­கள் சமூ­கத்­தி­னர் ஈடு­பட்­ட­னர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net