சம்பந்தனின் நிதியொதுக்கீட்டில் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா

சம்பந்தனின் நிதியொதுக்கீட்டில் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பாடசாலையொன்றின் ஒரு பகுதி மதிலுக்கான அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – கின்னியா, இராவணேஸ்வரன் வித்தியாலயத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கடந்த யுத்தகாலத்தில் இப்பாடசாலை இயங்காத நிலைமையில் இருந்தது. அத்துடன் சில காலம் படையினர் முகாம் இங்கு இருந்தது. இந்த நிலையில் இருந்து படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு மேலும் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் முன்வர வேண்டும் என பாடசாலை அதிபர் டி.சிவானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம், பிரதேசசபை தவிசாளர் ஜி.ஞானகுணாளன், சம்பந்தனின் பிரத்தியேக செயலாளர் ஏ.குகதாசன், தென்கைலை ஆதீனம் சுவாமி அகத்தியர் அடிகளார், வலய கல்வி பணிப்பாளர் அருளானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net